கடலூர், நாகை மாவட்டங்களில் பரவலாக மழை
வெப்பச் சலனம் காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.17) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.17) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.