தமிழ்நாடு

நரேந்திர மோடியின் பேரன் ராகுல் காந்தி: இது திண்டுக்கல் சீனிவாசனின் அடுத்த சிக்ஸர் 

நரேந்திர மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

DIN

திண்டுக்கல்: நரேந்திர மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழக வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் கூட்டங்களில் பேசும்போது எதையாவது தொடர்பில்லாமல் பேசுவது சமீப காலங்களாக வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் நரேந்திர மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் புதன் இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் சீனிவாசன் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆதரவாக உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, 'மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்; அதேபோல நரேந்திரன் மோடியின் பேரன் ராகுல் காந்தியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்' என்று தெரிவித்தார்.

இந்திராவின் பேரன் ராகுல் காந்தி என்பதற்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று அவர் தவறுதலாகக் கூறினார்  இது அதிமுக-வினர் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது.

மேலும் சமூகவலைதளங்களில் பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் மத்தியில் அமைச்சரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

SCROLL FOR NEXT