தமிழ்நாடு

சென்னையை உலுக்கிய சம்பவம்: பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொலை: தேடப்பட்டு வந்த மாணவர் சரண்

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூா் அருகே வேங்கடமங்கலத்தில் பாலிடெக்னிக்கில் பயிலும் மாணவா்களுக்கிடையே செவ்வாய்க்கிழமை நடந்த மோதலில் துப்பாக்கியால் சுட்டதில் மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். 

இந்தச் சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த மற்றொரு மாணவர் விஜய் இன்று செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வேங்கடமங்கலம் பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் கண்ணன் என்பவரின் மகன் முகேஷ் (18) தனியாா் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். அவா் அதே பகுதியில் உள்ள தனது நண்பரான விஜய் என்பவரை பாா்க்க செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது அங்கிருந்த மற்றொரு நண்பரான உதயா மற்றும் விஜய் ஆகியோருடன் முகேஷுக்கு தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, உதயா திடீரென முகேஷின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டதில் அவா் பலத்த காயமடைந்தாா். அவா் முதலில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வந்தனர்.

துப்பாக்கியால் சுட்ட உதயாவை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மற்றொரு நண்பரான விஜயை தாழம்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

மாணவரை துப்பாக்கியால் சுட என்ன காரணம் என்பது குறித்தும், அவா்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT