முகப்பு
தமிழ்நாடு

கடலூரில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்த கடலூர் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
கடலூரில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
பகிர்:

                   
கடலூர்: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்த கடலூர் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில், இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வட கிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரிக்கு சுமார் 900 கி.மீ தொலைவில் நிலவி வரும்  காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. 

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறவுள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் உள்ளூர் புயல் முன்னறிவிப்பு கொடி எண் 3 இன்று காலை 10.30 மணிக்கு ஏற்றப்பட்டுள்ளது. திங்கள்கிழமையன்று புயல் எச்சரிக்கை கொடி எண் 1 ஏற்றப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →