தமிழ்நாடு

‘புரெவி’ புயல் எதிரொலி: தென் மாவட்டங்களுக்கு விமான சேவை ரத்து

DIN

‘புரெவி’ புயல் எதிரொலியால், தென் மாவட்டங்களுக்கான விமான சேவை வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை இரவு புரெவி புயலாக வலுவடைந்தது. இலங்கையில் மையம்கொண்ட புயல் புதன்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், தென்மாவட்டங்களில் ‘புரெவி’ புயல் தீவிரமடைந்து வருவதால் வியாழக்கிழமை காலை முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமானங்களின் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி இரு மார்க்கமாக செல்லும் 3 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT