முகப்பு
தமிழ்நாடு

திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் பிள்ளைமார் சமுதாயத்தினர் சாலை மறியல்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு, நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைமார் சமுதாயத்தினர் ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் பிள்ளைமார் சமுதாயத்தினர் சாலை மறியல்
பகிர்:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு, நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைமார் சமுதாயத்தினர் ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிள்ளைமார் சமுதாய வேளாளர் பட்டத்தை தேவேந்திரகுல வேளாளர் என்ற பிரிவிற்கு மாற்றம் செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிள்ளைமார் சமுதாய மாவட்டச் செயலாளர் புல்லட் ராம்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மதுரை விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே கண்டன கோஷமிட்டவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றதால் போராட்டக்குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் தங்களது வேளாளர் சமுதாயத்தை வேறொரு சமுதாயத்துடன் இணைத்ததைக் கண்டிக்கும் விதமாக வரும் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்கமாட்டோம் என கோஷம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை டிஎஸ்பி வினோதினி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →