முகப்பு
தமிழ்நாடு

காவல்துறை காலியிடங்களை நிரப்ப காலதாமதம் ஏன்?: நீதிமன்றம்

தமிழகத்தில் காவலர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் செய்வது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
மதுரைக்கிளை நீதிமன்றம்
பகிர்:

தமிழகத்தில் காவலர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் செய்வது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது மற்றும் ஊதிய உயர்வு செய்து தரக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை மதுரைக்கிளை நீதிபதிகளான கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்னைக்கு தீர்வு காண்கின்றனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் கோரிக்கைகளை ஏற்பதில் காலதாமதம் செய்யலாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு குறித்து நாளை பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தவறும் பட்சத்தில் தமிழக உள்துறை செயலர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நேரிடும் என்றும் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →