முகப்பு
திருப்பூரில் ரூ 37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்றோர்.
தமிழ்நாடு

திருப்பூரில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு

திருப்பூரில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி காணொலிக் காட்சி மூலமாக சனிக்கிழமை திறந்து வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
திருப்பூரில் ரூ 37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்றோர்.
பகிர்:

திருப்பூர்: திருப்பூரில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி காணொலிக் காட்சி மூலமாக சனிக்கிழமை திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மாற்று முறை தீர்வுமையம் கட்டும் பணிகள் நடைபெற்றது. இதில், மொத்தமாக 18 நீதிமன்றங்கள், கோப்புகள் வைப்பறை, சொத்துகள் வைப்பறை, பயிற்சி மண்டபம், கூட்ட அரங்கம் ஆகியன கட்டும் பணிகளை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 

இந்தநிலையில், பணிகள் அனைத்து நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய நீதிமன்றத் திறப்பு விழா காணெலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. புதிய நீதிமன்றக் கட்டடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி காணொலிக் காட்சி மூலமாக சனிக்கிழமை திறந்து வைத்தார்.

இதனிடையே, திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. 

இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சுவாமிநாதன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.அல்லி, செயற்பொறியாளர் ரவி, மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், கரைப்புதூர் ஏ.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →