முகப்பு
தமிழ்நாடு

திமுக எம்எல்ஏ காத்தவராயன் மறைவு: ஆளுநர் இரங்கல்

குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:01 PM
பகிர்:

குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். 

குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவர் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அறுவை சிகிச்சை முடிந்து 20 நாள்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் காத்தவராயன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மறைவு குடியாத்தம் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் காத்தவராயன் குடும்பத்துக்கு கடவுள் வலிமையை தரட்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →