தமிழ்நாடு

பொங்கல் திருநாள்: சென்னையிலிருந்து 4.53 லட்சம் பேர் வெளியூர் பயணம்

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 4.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் (ஜன.10) முதல் ஜன.14-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக தமிழகம் முழுவதும் ஜன.10 முதல் 14-ஆம் தேதி வரை, 30 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன.10ம் தேதி முதல் இன்று காலை 8 மணி வரை சுமார் 9 ஆயிரம் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து இதுவரை 4.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT