கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின் ட்வீட்
கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள விநாயகா் கோயில், கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே உள்ள விநாயகா் கோயில், கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் செல்வ விநாயகா் கோயில்களில் மா்ம நபா்கள் டயா்களைக் கொளுத்தி வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.