தமிழ்நாடு

கரோனாவில் இருந்து மீண்டு பணியில் இணைந்த காவல்துறையினருக்கு ஏ.கே. விஸ்வநாதன் வாழ்த்து

கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, கூடுதல் ஆணையாளர் மற்றும் 49 காவல்துறையினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் வாழ்த்து தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

DIN


சென்னை: கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, கூடுதல் ஆணையாளர் மற்றும் 49 காவல்துறையினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் வாழ்த்து தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) மற்றும் 49 காவலர்கள் ( 2 உதவி ஆணையாளர்கள், 4 ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள், 31 காவலர்கள்) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். 

பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்று (01.6.2020) பணிக்கு திரும்பிய கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு)  தினகரனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் ஏ.கே. விஸ்வநாதன் வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இன்று பணிக்குத் திரும்பிய 49 காவலர்களுக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் அனைத்து போலீசாருக்கும் கபவாத சூப் வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி - 3 உரிமங்கள்!

45 சவரன் நகையைக் கண்டெடுத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை!

பிக் பாஸ் 9: வெளியேறும்போதுகூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

SCROLL FOR NEXT