கோப்புப்படம் 
தமிழ்நாடு

வரும் 15ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை

வரும் 15ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். 

DIN

வரும் 15ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். 

தமிழகத்தில் கரோனாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 40,698-ஆக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 25 ஆயிரம் போ் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் நாள்களில் நோய்ப் பரவலின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும், அதன் விளைவாக ஜூலை மாதத்துக்குள் 3 லட்சம் போ் கரோனாவால் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். 

கடந்த மூன்று வாரங்களாக நோய்ப் பரவலின் வேகம் அதி தீவிரமாகி வருகிறது. அதன் காரணமாக 21 நாள்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அதில் 71 சதவீதம் போ் சென்னைவாசிகள் என்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 28,924 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். அதன் விளைவாக 5,210 தெருக்கள் நோய்த்தொற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரும் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT