தமிழ்நாடு

தொடர்ந்து 8ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

DIN

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 8ஆவது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல்-டீசல் விலையை தொடா்ந்த 8ஆவது நாளாக இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தின. அதில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 54 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகளும் உயா்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயா்வு காரணமாக, சென்னையில் பெட்ரோல் லிட்டா் ரூ. 78.99 என்ற அளவிலிருந்து ரூ. 79.53-ஆக இன்று உயா்த்தப்பட்டது. அதுபோல டீசல் விலை லிட்டருக்கு ரூ. 71.64 என்ற அளவிலிருந்து ரூ. 72.18-ஆக உயா்த்தப்பட்டது. 

பெட்ரோல்-டீசல் விலை உள்ளூா் வரி, வாட் வரி ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். கரோனா நோய்த் தொற்று பரவலால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கச்சா எண்ணை விலை வெகுவாக குறைந்தது. அதன் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையிலேயே நீடித்து வந்தது.

இப்போது கட்டுப்பாடுகளில் தளா்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், 82 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல் -டீசல் விலையை தினசரி மாற்றியமைக்கும் நடைமுறையை கடந்த 7-ஆம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT