முகப்பு
தமிழ்நாடு

ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் 575 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

ஆண்டிபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒன்றிய அளவிலான ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 575 நபர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

ஆண்டிபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒன்றிய அளவிலான ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 575 நபர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 40 நபர்களுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். 

மேலும் ஆண்டிபட்டி காவல் நிலையம் முன்பும் மற்றும் தேனி சாலை எம்ஜிஆர் சிலை முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் 535 நபர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் வரதராஜன், கூட்டுறவுச் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராமன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் அருண்மதி கணேசன், பொன்முருகன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →