தமிழ்நாடு

தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

தமிழகத்தில் கரோனாவை எதிர்கொள்வதற்கும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் ரூ. 9,000 கோடி தேவை என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

DIN


தமிழகத்தில் கரோனாவை எதிர்கொள்வதற்கும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் ரூ. 9,000 கோடி தேவை என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் 2-வது நாளாக இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற இன்றையக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் பங்கேற்றார். 

அப்போது பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வைத்த முக்கியக் கோரிக்கைகள்:

  • மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏற்கெனவே கோரியிருந்த ரூ. 3,000 கோடி வழங்க வேண்டும்.
  • தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், 2-வது தொகுப்பு நிதியை விடுவிக்க வேண்டும். 
  • கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி ஒதுக்க வேண்டும்.
  • மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை தற்போது விடுவிக்க வேண்டும்.
  • கரோனாவை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT