முகப்பு
தமிழ்நாடு

ராமேசுவரத்தில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி வேலைநிறுத்த போராட்டம்

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்கக் கோரி வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் மீனவர்கள் ஈடுபட்டனர். 

Updated On : 20 ஜூன், 2020 at 4:53 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்க வேண்டும், உயிரிழந்த மீனவர்களுக்கு 20 இழப்பீடு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் சனிக்கிழமை தொடங்கியது. துறைமுகத்தில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தம், 5 ஆயிரம் மீனவர்கள் மற்றும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.  

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 13ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்று நான்கு மீனவர்களுடன் மாயமான  ஹெட்டோ என்பவரது விசைப்படகு அதில் சென்ற மலர் வண்ணன் (55), ரெஜின்பாஸ்கர் (43) ஆஸ்டின்(19) என்ற சுஜிந்திரா, ஜேசு(60) மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தநிலையில், ஜேசு என்ற மீனவர் கோட்டை பட்டணம் மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதில் ரெஜின்பாஸ்கர் உடல் வெள்ளிக்கிழமை கோடியாக்கரை கரைக்கு மீட்டனர். ஊடல் என்று கூறி ராமேசுவரம் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, சனிக்கிழமை அதே பகுதியில் ஆஸ்டின்(எ)சுஜிந்திரா உடல் மீட்டனர். மேலும் மலர் வண்ணன் உடலைத் தொடர்ந்து மீனவர்கள் தேடி வருகின்றனர்.  

Advertisement

இந்தநிலையில், மாயமான மீனவர்களை மீட்க வேண்டும், உயிரிழந்த மீனவர்களுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். படகு மூழ்கி உயிரிழக்கும் மீனவர்கள் விரைந்து சென்று மீட்கும் வகையில் விபத்து மீட்பு 108 ஆம்புலனஸ் படகு உருவாக்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கி உள்ளனர்.

இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் மற்றும் சார் தொழிலாளர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.