முகப்பு
தமிழ்நாடு

செங்கல்பட்டில் புதிதாக 240, திருவள்ளூரில் 169 பேருக்கும் கரோனா தொற்று

செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நன்பகல் வரை கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
corona testing
பகிர்:


செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நன்பகல் வரை கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 240 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இன்று மேலும் 240 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,647ஐ எட்டியுள்ளது. 

திருவள்ளூர் 

சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 169 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

சென்னையை ஒட்டியுள்ள மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ஆவடியில், சோழவரம், பூவிருந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளது. 

இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3,254 ஆக உயர்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →