முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் பிரபல ரெளடி தலையில் கல்லைப் போட்டுக் கொலை

புதுச்சேரியில் பிரபல ரெளடி தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 29 ஜூன், 2020 at 4:39 PM
பகிர்:

புதுச்சேரியில் பிரபல ரெளடி தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி முதலியார்பேட்டை அவ்வை நகர் பகுதியில் 35 வயது மதிப்புள்ள இளைஞர் தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாக அவ்வழியே சென்ற மக்கள் முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றிய பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும்  கொலை செய்யப்பட்டவர் யார் என்றும் கொலை சம்பவத்தில் யார் ஈடுபட்டுள்ளனர் என்று விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

முதற்கட்ட விசாரணையில் முகம் சிதைக்கப்பட்டும், கல்லைப் போட்டு கொலைச் செய்யப்பட்டிருந்தது. கோவிந்தசாலை சேர்ந்த பிரபல ரவுடி அமுல்தாஸ் (31) என்றும், இவர் மீது 4 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

கொலை செய்தவர்களை காவல்துறையில் தீவிரமாகத் தேடிவருகின்றனர், கொலையாளிகளைப் பிடித்த பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.