முகப்பு
ஆவடியில் கணவன் கொலை: பிணையில் வந்து தலைமறைவான  மனைவி கைது
தமிழ்நாடு

ஆவடியில் கணவன் கொலை: பிணையில் வந்து தலைமறைவான  மனைவி கைது

கணவனை கொலை செய்த வழக்கில் கைதாகி பிணையில் வெளி வந்து தலைமறைவாக இருந்த மனைவி கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாடு

ஆவடியில் கணவன் கொலை: பிணையில் வந்து தலைமறைவான  மனைவி கைது

கணவனை கொலை செய்த வழக்கில் கைதாகி பிணையில் வெளி வந்து தலைமறைவாக இருந்த மனைவி கைது செய்யப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
ஆவடியில் கணவன் கொலை: பிணையில் வந்து தலைமறைவான  மனைவி கைது
பகிர்:


சென்னை: கணவனை கொலை செய்த வழக்கில் கைதாகி பிணையில் வெளி வந்து தலைமறைவாக இருந்த மனைவி கைது செய்யப்பட்டார்.

சென்னை பெருநகர காவல் நிலையங்களில் பதிவான குற்ற வழக்குகளில் நீதிமன்ற பிணை பெற்று சென்ற பின்னர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வரும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 08.7.2017 அன்று கூ-6 ஆவடி காவல் நிலைய எல்லையில் கணவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியான ஆவடியைச் சேர்ந்த யுவராணி (27) கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

பின்னர் நிபந்தனை பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்த யுவராணி நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால், இவர் மீது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்பேரில், கூ-6 ஆவடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி யுவராணி, வ/27, வள்ளி வேலன் நகர், பொத்தூர், ஆவடி டேங்க் பேக்டரி என்பவரை கைது செய்தனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட  குற்றவாளி யுவராணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →