அபிராமம் காவல் ஆய்வாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
அபிராமம் காவல் ஆய்வாளரைக் கண்டித்து நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் நிறுவனர் காவல் நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அபிராமம் காவல் ஆய்வாளரைக் கண்டித்து நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் நிறுவனர் காவல் நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
தேவர் குருபூஜை விழாவின் போது மாவட்ட நிர்வாகத்தின் தடைகளை மீறி செயல்பட்டதாக அபிராமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து வருகின்றனர். இந்நிலையில் வலசை கிராமத்தில் நள்ளிரவில் பெண்கள், குழந்தைகளை துன்புறுத்தி, இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்குவதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் என்.மகாராஜன் அபிராமம் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணியை கண்டித்து அபிராமம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இவருடன் சேர்த்து வலசை கிராமத்தைச் சேர்ந்த 35 பெண்கள் உள்பட 36 பேர் அபிராமம் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.