முகப்பு
இன்று நண்பகல் 12 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை
தமிழ்நாடு

இன்று நண்பகல் 12 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
இன்று நண்பகல் 12 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை
பகிர்:

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

நிவர் புயல் நேற்று நள்ளிரவில் புதுச்சேரிக்கு அருகே   கரையைக் கடந்த நிலையில், பலத்த காற்று வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல்  மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று நிலைமை ஓரளவுக்கு சீரடைந்ததை அடுத்து, இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று நண்பகல் 12 மணி முதல், விடுமுறை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருப்பதால், மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவது பொதுமக்களுக்கு மிகுந்த வசதியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
 
முழு கட்டுரையைப் படிக்க →