ராகுல் கைதைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ராகுல்காந்தி கைதைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
ராகுல்காந்தி கைதைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ராகுல் காந்தி கைதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட எஸ்சி பிரிவுத் தலைவர் ஜோதிமணி, நகரத் தலைவர் லஷ்மணன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ம.அய்யனார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அப்போது உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினப் பெண் கடந்த 14-ம் தேதி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும், அவ்விதம் கொலையுண்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ராகுல் காந்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கம் செய்தனர். உடன் நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.