முகப்பு
சென்னையில் கட்டப்பட்ட 100 காவலர் குடியிருப்பு: முதல்வர் திறந்துவைத்தார்
தமிழ்நாடு

சென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட காவலர் குடியிருப்பு: முதல்வர் திறந்துவைத்தார்

தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை மாவட்டம், கீழ்ப்பாக்கம், லுத்ரல் கார்டனில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். 

தமிழ்நாடு

சென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட காவலர் குடியிருப்பு: முதல்வர் திறந்துவைத்தார்

தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை மாவட்டம், கீழ்ப்பாக்கம், லுத்ரல் கார்டனில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
சென்னையில் கட்டப்பட்ட 100 காவலர் குடியிருப்பு: முதல்வர் திறந்துவைத்தார்
பகிர்:

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை மாவட்டம், கீழ்ப்பாக்கம், லுத்ரல் கார்டனில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, இன்று தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சென்னை மாவட்டம், கீழ்ப்பாக்கம், லுத்ரல் கார்டனில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், 15 கோடியே 39 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 43 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 2 காவல்துறை கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 1 குடியிருப்பு, 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள், காவல்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில செயல்பாட்டு மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமூக ஊடக மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்யத காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை மாவட்டம், கீழ்ப்பாக்கம், லுத்ரல் கார்டனில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை முதல்வர் பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். 

இக்குடியிருப்பானது தரை மற்றும் 13 தளங்களுடன், மின்தூக்கிகள், தீயணைப்பு உபகரணங்கள், ஆழ்துளை கிணறு, குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, இடிதாங்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் - பெரும்பாக்கம், சேலம் மாவட்டம் - மகுடஞ்சாவடி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் - பாச்சல் ஆகிய இடங்களில் 7 கோடியே 10 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 43 காவலர் குடியிருப்புகள்; கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் - வாலிநோக்கம் ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள், சேலம் மாவட்டம் - வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையம், தென்காசி மாவட்டம் - தென்காசி போக்குவரத்து காவல் நிலையம், என 3 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையக் கட்டடங்கள்; சேலம் மாவட்டம் - ஆத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் - ஜீயபுரம் ஆகிய இடங்களில் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, என 1 கோடியே 22 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல்துறை கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் - நாகப்பட்டினத்தில் 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 1 குடியிருப்பு; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - உப்பிலியாபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் - நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 2 கோடியே 7 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள்; சென்னை மாவட்டம், மயிலாப்பூர், காவல்துறை தலைமை அலுவலகத்தில், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநில செயல்பாட்டு மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமூக ஊடக மையம் என மொத்தம், 28 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2019-20ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பகுதி பங்கு ஈவுத் தொகையான 1 கோடி ரூபாய்க்கான காசோலையை இன்று தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ம.நா.மஞ்சுநாதா வழங்கினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →