முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் விடிய விடிய கனமழை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. 

கடந்த சில தினங்களாக வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் நேற்று வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. 

விடிய விடிய பெய்து வரும் மழை காரணமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர். அதிகபட்சமாக மயிலாப்பூரில் 20 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.

இதனிடையே சென்னையில் இன்று மழை மேலும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →