முகப்பு
தமிழ்நாடு

ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சந்திப்பு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டு ராவ் இன்று சந்தித்துப் பேசினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சந்திப்பு
பகிர்:


சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டு ராவ் இன்று சந்தித்துப் பேசினார்.

தமிழகம், புதுச்சேரி, கோவா ஆகியவற்றுக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார். 

இதையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டு ராவ் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

அப்போது, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என். நேரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →