தமிழ்நாடு

திமுகவும், காங்கிரசும் மக்களை ஏமாற்றும் கட்சிகள்: பிரதமர் மோடி

DIN

திமுகவும், காங்கிரசும் மக்களை ஏமாற்றும் கட்சிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் பிரசாரத்தில் கூறியுள்ளார். 

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் தொலைநோக்குப் பார்வைக்கு மக்கள் எப்போதும் ஆதரவு அளிப்பர் நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி முக்கியத்துவம் அளித்து வருகிறது. 

ரூபாய் 100 லட்சம் கோடி கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் தென்தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பாக மதுரை கொல்லம் தொழில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. கடந்த 2009 நிதிநிலை அறிக்கையைக் காட்டிலும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 238 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எல்லோருக்குமான வளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டு இதுபோன்ற பல திட்டங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படுத்தி வருகிறது அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் இதுவரை 16 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 2024 அனைவருக்கும் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்படும் இளைஞர்களைத் தொழில் சார்ந்த தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதேபோல ஜவுளித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் மட்டும் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT