தமிழ்நாடு

சென்னையில் அதிகபட்ச வெப்பம் பதிவு; ஈரோடு முதலிடம்

ENS

சென்னை: சென்னையில் இந்தக் கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பம் நேற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட  27 மாவட்டங்களில் நாளை வரை இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுவதால், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக சென்னையில் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது 34.5 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். ஆனால், வெள்ளிக்கிழமை பகல் 1.15 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்தக் கோடைக்காலத்தில் சென்னையில் நேற்று முதல் முறையாக கோடை வெப்பமானது 40 டிகிரியை எட்டிவிட்டது.

நுங்கம்பாக்கத்தில் மட்டுமல்ல, தாம்பரம், மீனம்பாக்கம், மாதவரத்திலும் 41 டிகிரி செல்சியஸை விட அதிகமாகவே வெப்பம் பதிவாகியுள்ளது. 

சென்னையில் இந்த நிலை என்றால், தமிழகத்தின் மிக வெப்பமான பகுதிகளாக ஈரோடு, வேலூர், கரூர், திருத்தணி ஆகியவை இடம்பெற்றுள்ன. ஈரோட்டில் நேற்று 43 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு சில நாள்களாக நாட்டில் அதிக வெப்பம் நிறைந்த 5 பகுதிகளில் ஈரோடும் இடம்பெற்றுள்ளது.

எனவே, பொதுமக்கள், வேட்பாளா்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினா் திறந்தவெளியில் வேலை செய்வது, ஊா்வலமாக செல்வதை நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தவிா்க்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

வடமேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்டங்களில் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 டிகிரியில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். எனவே, பொதுமக்கள், விவசாயிகள், தோ்தல் வேட்பாளா்கள், வாக்காளா்கள் மற்றும் போக்குவரத்துக் காவலா்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும் ஊா்வலம் செல்வதைத் தவிா்க்க அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT