முகப்பு
தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: பிரதான சாலையின் தீராத போக்குவரத்து பிரச்னை தீர்க்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் போக்குவரத்துப் பிரச்னையை தீர்த்து வைக்கும் கட்சிக்கே எங்கள் வாக்கு என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
கூத்தாநல்லூர் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் போக்குவரத்துப் பிரச்னையை தீர்த்து வைக்கும் கட்சிக்கே எங்கள் வாக்கு என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மன்னார்குடியிலிருந்து, திருவாருர் செல்லக் கூடிய பிரதான ஊக்களில் முக்கியமான ஊர், சின்ன சிங்கப்பூர் என அழைக்கப்படும் கூத்தாநல்லூர்தான் பிரதான ஊர். கூத்தாநல்லூர்  நகராட்சிக்குட்பட்ட லெட்சுமாங்குடி பிரதான சாலை கடும் நெருக்கடியான சாலையாகும். இச்சாலையின் வழியாக, மன்னார்குடியிலிருந்து வரக்கூடிய பேருந்துகள், திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, நாகூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லுகின்றது. 

இதேபோல், லெட்சுமாங்குடிப் பாலம் வலப்பக்கத்தில் வடபாதிமங்கலம், திரு ராமேஸ்வர், மாவூர், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களுக்கும், இடப்பக்கத்தில் பொதக்குடி, வாழாச்சேரி, அத்திக்கடை, கொரடாச்சேரி, திருவாரூர், குடவாசல், கும்பகோணம் மற்றும் சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் சென்று வருகின்றது. 

நூற்றுக்கணக்கான பேருந்துகளும், ஆயிரக் கணக்கான கார்களும், இருசக்கர வாகனங்களும் செல்கின்றன. 30 அடியி ருந்து 40 அடிகள் மட்டுமே கொண்ட இந்தப் பிரதான சாலையில், இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பல நேரங்களில் இச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய் விடுகிறது. அவசர நோயாளிகளை அவசரமாகச் அழைத்துச் செல்லக்கூட முடியாத அவல நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் பல விபத்துக்களும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடியால் பல ஆண்டுகளாக இப்பகுதி மக்களும், இச்சாலை வழியே செல்பவர்களும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தப் பிரதான சாலையை மாவட்ட ஆட்சியர்களாக இருந்த எந்த மாவட்ட ஆட்சியரும் கண்டு கொள்ளவில்லை. எந்த அரசியல் பிரமுகர்களும், எந்த மக்கள் பிரதிநிதிகளும்  கண்டு  கொள்ளவில்லை. இப்பகுதியின் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க, இச்சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்ற வேண்டும். இல்லையேல், கூத்தாநல்லூர் காவல் நிலையத்திலிருந்து, மரக்கடை கால்நடை மருத்துவமனை வரை மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இச்சாலையில் ஏற்படும் போக்குவரத்துப் பிரச்னையை தீர்த்து வைப்பவருக்கே வாக்களிப்போம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.