முகப்பு
தமிழ்நாடு

காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
பகிர்:

காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கப்பட்டன.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில், 234 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யக்கூடிய விவிபாட் இயந்திரங்கள் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்ட மேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.

மாவட்ட தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா  முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் திங்கள்கிழமை பிற்பகல் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடி அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் செல்வதற்கு தனித்தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் பாதுகாப்புடன் இவை அந்தந்த சாவடிகளுக்குக் கொண்டு  செல்லப்பட்டன. இவை அனைத்து சாவடிகளுக்கும் சென்றடைந்துவிட்டதா என்பதை  உறுதி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

மாவட்ட தேர்தல் தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில்,  

மாவட்டத்தில் 234 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 33 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த சாவடிகளில் மைக்ரோ அப்சர்வர் நியமனம், கண்காணிப்பு கேமரா பொருத்தல், ஆயுதம் ஏந்திய மத்தியப் படையினர் கூடுதலாக நியமனம் எனச் செய்யப்பட்டுள்ளது. தவிர, பிற வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 வாக்குச் சாவடிகளில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை, பந்தல் வசதிகள் மற்றும் சாய்வு தளம் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப் பதிவு நேரமாகும். வாக்காளர்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்து காரைக்கால் 100 சதம் பதிவு என்பதை உறுதிப்படுத்த முன்வரவேண்டும் என்றார்.

இயந்திரம் அனுப்பிவைப்பு நிகழ்வில் மாவட்ட  துணை தேர்தல் அதிகாரி எஸ்.பாஸ்கரன், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எம்.ஆதர்ஷ், எஸ்.சுபாஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →