முகப்பு
தமிழ்நாடு

கூத்தாநல்லூர் : மன வளர்ச்சி குன்றிய 30 பேர் வாக்களித்தனர்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர்  மனோலயம் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த மன வளர்ச்சிக் குன்றிய 30 பேர் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
கூத்தாநல்லூர் : மன வளர்ச்சிக் குன்றிய 30 பேர் வாக்களிப்பு
பகிர்:

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர்  மனோலயம் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 30 பேர் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.  மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடிதாங்கிச்சேரியில்  மனோலயம் மனவளர்ச்சி குன்றிய பயிற்சிப் பள்ளி அமைந்துள்ளது.

இத்தேர்தலில், மனோலயத்தைச் சேர்ந்த 30 மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. நிறுவனர் ப.முருகையன் ஏற்பாட்டின் படி, குடிதாங்கிச்சேரி தொடக்கப் பள்ளியில், மன வளர்ச்சி குன்றிய 30 பேர் வாக்களித்தனர்.

வாக்களித்த மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் எஸ்.சந்திரமோகன், சித்தாம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயஸ்ரீ, பயிற்சியாளர்கள் சுரேஷ், செளம்யா உள்ளிட்டோர் உறுதுணை புரிந்தனர். மாற்றுத்திறனாளி அலுவலர்கள் வாக்களிப்பதற்கு அப்பகுதி மக்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.