தமிழ்நாடு

ஸ்டாலின், கமல், ரஜினி வாக்களித்தனர்

DIN


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோடை வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க பொதுமக்கள் பலரும் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகிறார்கள். எனவே காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதைப் பார்க்க முடிகிறது.

சென்னையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். 

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதியுடன் இன்று காலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்தினார்.

பிறகு, எஸ்ஐஇடி கல்லூரிக்கு வந்து, பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தனது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சராவுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே, காலை 7 மணிக்கே, நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT