தமிழ்நாடு

’முகக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல்,டீசல் இல்லை’

DIN

தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட முடியாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4276 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவருமாறு தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT