முகப்பு
தமிழ்நாடு

கரோனா வார்டாக மாற்றப்படும் மாநிலக் கல்லூரி மாணவர் விடுதி

சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில கல்லூரி மாணவர் விடுதி கரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
கரோனா வார்டாக மாற்றப்படும் மாநிலக் கல்லூரி மாணவர் விடுதி
பகிர்:


சென்னை: சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில கல்லூரி மாணவர் விடுதி கரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநிலக் கல்லூரியின் மாணவர் விடுதியில் 250 கரோனா படுக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.

சென்னையில் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர் விடுதியை சுத்தப்படுத்தி, கரோனா நோயாளிகள் தங்கும் வார்டாக மாற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. நாள்தோறும் கரோனா பாதிக்கப்படுவரின் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்து வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →