முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் அதிகாலை முதல் கனமழை

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்  பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்தது.

Updated On : 15 ஏப்ரல், 2021 at 8:03 AM
பகிர்:

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்  பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்தது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழக உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை (ஏப். 15) மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் இரவு முதலே பரவலாக மழை பெய்தது.

Advertisement

மேலும், நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது.

இதேபோன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று (ஏப்.15) அதிகாலை முதலே பலத்த மழை பெய்தது.

சென்னை கோயம்பேடு, அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், சென்ட்ரல், தியாகராய நகர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே. நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் மழை பெய்தது.

மேலும் புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் பர்வலாக மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.