தமிழ்நாடு

இதில் எதை தெரிவு செய்யப் போகிறீர்கள்? காவல்துறை கேள்வி

DIN

சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. 

முந்தைய பாதிப்பை விடவும், இரண்டாவது கரோனா அலையின்போது, கரோனா தொற்று பாதித்த பாதிக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிறது புதிய புள்ளி விவரம்.

அதாவது, நேற்று காலை நிலவரப்படி சென்னையில் 28 ஆயிரம் கரோனா நோயாளிகள் இருந்தனர். இவர்களில் சுமார் 12 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடே அல்லலுற்று வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல அமைப்புகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் சென்னை காவல்துறை தரப்பில் தங்களது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு, இதில் எது ஒன்றை தெரிவு செய்வதும் மிகவும் எளிது. பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று பகிர்ந்துள்ளனர். அந்தப் புகைப்படம் இதுதான்.

இந்தப் புகைப்படத்தில் முகக்கவசம் அணிவது, தனிமைப்படுத்திக் கொள்வது போன்றவற்றை தெரிவு செய்யவில்லை என்றால், அதற்கு நேரெதிரான கரோனாதொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது மற்றும் கரோனாவுக்கு பலியாவது போன்றவை நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது மூக்கு மற்றும் வாயை மறைத்து முகக்கவசம் அணியுங்கள். அல்லது மரணத்தைத் தழுவி முகத்தையே மூட வேண்டியிருக்கும் என்பது போல  இந்த விழிப்புணர்வு புகைப்படம் அமைந்துள்ளது.

எனவே.. மக்கள் முகக்கவசத்தின் அவசியத்தை உணர்ந்து, அதனை கடமைக்காக போட்டுக் கொண்டிருக்காமல், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை முழுமையாக மூடியபடி போடுவது அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT