தமிழ்நாடு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிப்பு

DIN


காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை  2597 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து அணையின் நீா்மட்டம் 97.77 அடியிலிருந்து 97.87 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2469 கன அடியிலிருந்து 2597 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 61.98 டிஎம்சி ஆக உள்ளது. 

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நீா்வரத்து இரண்டாவது நாளாக அதிகரித்து, அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT