தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள் 
தமிழ்நாடு

தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள்

தொழில்துறை நிறுவன தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


தொழில்துறை நிறுவன தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில்,

தமிழகத்தில் முதற்கட்டமாக மலிவான வாடகை குடியிருப்புகள் சென்னை, கோவையில் அமைத்துத் தரப்படும்.

பிறகு தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் மலிவான வாடகை குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

கடந்த 100 நாள்களில் தமிழக அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் கோயில்களுக்குச் சொந்தமான 626 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பழனி முருகன் கோயில் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் திருத்தேர், திருக்குளம், நந்தனம் ஆகியவற்றை சீரமைக்கப்படும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT