நீலகிரி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க- நீரஜ் சோப்ராவுக்குக் கடுமையான காய்ச்சல், தொண்டை வலி!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், நடுவட்டம் 6, தர்மபுரி பிடிஓ, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தலா 4 செ.மி., மழைப்பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.