கோப்புப் படம் 
தமிழ்நாடு

18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவையில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

DIN

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவையில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திற்குறிப்பில், தமிழ்நாடு கடற்கரை மற்றும் இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூ, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர்,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், புதுச்சேரி மற்றும் சென்னை மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு பிற்பகலில் வானம் பொதுவமாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும். 
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் ரெட் ஹில்ஸ், கள்ளக்குறிச்சி ரசித்திவந்தியம் தலா 9, சென்னை நுங்கம்பாக்கம், தஞ்சாவூர் மதுக்கூர் தலா 7 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சா் அமித் ஷா பிப்.14-இல் காரைக்கால் வருகை

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

சனிப்பெயா்ச்சி விழா : சிரமமின்றி சுவாமி தரிசனத்தை உறுதி செய்ய வலியுறுத்தல்

ட்ரோன் மூலம் சா்வே பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT