முகப்பு
தமிழ்நாடு

இடிந்து விழுந்த வ.உ.சி. பூங்கா சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு வ.உ.சி. பூங்காவுக்குள் சுற்றுச்சுவர் சுற்றி எழுப்பப்பட்டுள்ளது. இதில் நடைபயிற்சி செல்லும் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவில் திடீரென இடிந்து விழுந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
இடிந்து விழுந்த வ.உ.சி. பூங்கா சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
பகிர்:


ஈரோடு: ஈரோடு வ.உ.சி. பூங்காவுக்குள் சுற்றுச்சுவர் சுற்றி எழுப்பப்பட்டுள்ளது. இதில் நடைபயிற்சி செல்லும் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவில் திடீரென இடிந்து விழுந்தது. 

இரவில் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது வரை அந்த சுவர் சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. மேலும் அருகிலுள்ள சுவரும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அந்தப் பகுதியை கடந்து வருகின்றனர். 

மேலும் அந்தப் பகுதியில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் விஷப் பூச்சிகள்  பூங்காவிற்குள் வரவும் வாய்ப்புள்ளது. எனவே இடிந்து விழுந்த சுவரை அகற்றிவிட்டு அந்தப் பகுதியில் புதிய சுவரை எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →