தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டம்: கடற்கரைகளில் அனுமதியில்லை

DIN


புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரை செல்லத் தடை  விதிக்கப்பட்டுள்ளதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில்,  கரோனாநோய்த்தொற்று  பரவலைத்கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவிவரும் உருமாறிய கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில்முதல்வர் தலைமையில் இன்று (டிச.13) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து மத்திய அரசு உத்தரவுப்படி கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை டிசம்பர் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அதன்படி சமுதாய, கலாச்சார,  அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

கரோனாநோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.12.2021 மற்றும் 1.1.2022 ஆகிய நாட்களில் அனைத்து  கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதி: 

அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும். 
அனுமதிக்கப்பட்ட  செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும், 

அனைத்து கல்லூரிகள்  மற்றும் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறைஇன்றி இயல்பாகசெயல்படும்.

பொதுவான அனுமதி:

கடைகளின் நுழைவு வாயிலில்,  வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கைசுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்துகடைகளும், குளிர்சாதனவசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக  இடைவெளியை  கடைப்பிடிக்கும் வகையில் ஒரேநேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில்பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT