தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 657 பேருக்கு கரோனா; 12 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 657 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 12 பேர் உயிரிழந்தனர்.

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 657 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 12 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று 674 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை திங்கள் கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 1,00,085 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 657 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,624-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 702 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,91,756-ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் 114 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக 5,59,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT