முகப்பு
தமிழ்நாடு

காலமானார் ச.குமரவேல்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு பகுதியில் வசித்து வந்த திமுக ஒன்றியச் செயலாளர் ச.குமரவேல்(78) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார்.

Updated On : 15 டிசம்பர், 2021 at 2:22 PM
ச. குமரவேல்
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு பகுதியில் வசித்து வந்த திமுக ஒன்றியச் செயலாளர் ச.குமரவேல்(78) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார்.

திமுகவில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட அவைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து செயல்பட்டவர். மருதூர் தெற்கு ஊராட்சி மன்றத்தின் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், கூட்டுறவு வங்கியின் தலைவர் என பல பதவிகளில் இருந்துள்ள இவர் தற்போது கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார்.

இதையுடம் படிக்க | 
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

 
இவருக்கு மனைவி ஜெயலெட்சுமி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இறுதி நிகழ்ச்சிகள் மருத்தூர் தெற்கில் இன்று புதன்கிழமை (டிச.15) மாலை 3 மணிக்கு நடைபெறும்.

தொடர்புக்கு:9442439794.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.