கிடைமட்ட கம்யில் தொங்கி கொண்டு 70 மீட்டர் கடந்து சாதனை படைத்த சிறுமி அனுஸ்ரீ  
தமிழ்நாடு

கிடைமட்ட கம்பியில் 87 வினாடிகளில் 70 மீட்டர் கடந்து பள்ளி சிறுமி சாதனை!

சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கிடைமட்ட கம்பியில் 87 வினாடிகளில் 70 மீட்டர் கடந்த 4 வயது பள்ளி சிறுமி அனுஸ்ரீ  சாதனை படைத்துள்ளார்.

DIN

சிதம்பரம்: சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கிடைமட்ட கம்பியில் 87 வினாடிகளில் 70 மீட்டர் கடந்த 4 வயது பள்ளி சிறுமி அனுஸ்ரீ  சாதனை படைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம், நெடுஞ்சேரி அருகே உள்ள மனக்குடியான்இருப்பூர் பகுதியை சேர்ந்த மோகன் - சத்யா தம்பதியின் இரண்டாவது மகள் அனுஸ்ரீ (4). தனியார் பள்ளியில் யுகேஜி பயிலுகிறார். 

இதையுடம் படிக்க | 
வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? 

சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் 4 வயது சிறுமி அனுஸ்ரீ  கிடைமட்ட கம்பியில் இரண்டு கைகளால் தொங்கிச் சென்று 87 வினாடிகளில் 70 மீட்டர் கடந்து சாதனை படைத்துள்ளார். 

பின்னர் உலக சாதனை புத்தக நிறுவனம் சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.முத்துக்கருப்பன் வழங்கினார். 

சாதனை படைத்த மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்குகிறார் தலைமை ஆசிரியர் ஏ.முத்துக்கருப்பன்.

சிதம்பரம் வர்த்தக சங்க இணைச் செயலாளர் ஜி.முரளிதரன், கடலூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஷேக்கமால், முதுகலை ஆசிரியை ஜி.சுந்தரி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். 

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் பொது முகமையர் பிரபு, கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாதனை நிகழ்ச்சியை நடத்தி சான்றிதழ் வழங்கினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

SCROLL FOR NEXT