ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.61லட்சம் பறிமுதல் 
தமிழ்நாடு

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.61 லட்சம் பறிமுதல்

ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர்  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.61லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

DIN

ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர்  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.61 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 3 வது மாடியில் ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள 42 பேரூராட்சி்களின் மண்டலமாக செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக நேற்று ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்த நிலையில், இந்த பணிக்களுக்காக லஞ்சம் கேட்கப்படுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு புகார்கள் சென்றன.

புகாரின் பேரில் இன்று (டிச.22) ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் திடிரென ஈரோடு லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் மீது கணக்கில் வராத  ரூ.61 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணம் தொடர்பாக அதிகாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் ரூ.1 கோடிக்கும் மேல் லஞ்ச தொகை இருக்கும் என லஞ்ச ஒழிப்பு போலீசார்  தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எச்சரிக்கை அளவைக் கடந்து செல்லும் யமுனை நதி!

தில்லியின் 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை: மக்கள் வீட்டிற்குள் இருக்க ஐஎம்டி எச்சரிக்கை

தில்லி பல்கலை. மாணவா்கள் சங்கத் தோ்தலில் இருக்கும் சவால்கள் என்ன?

இடபிள்யுஎஸ் மாணவா்கள் விவகாரம்: பொது நல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா கோட்டு கும்பலில் இருவா் கைது

SCROLL FOR NEXT