தமிழகத்தில் புதிதாக 604 பேருக்கு கரோனா; 8 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 604 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் 695 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 604 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் 695 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று 602 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று (டிச.22) தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 1,01,713 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 604 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,41,617-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,699-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 695 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,97,939-ஆக உயர்ந்துள்ளது.