திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா
திருப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 ஆம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 ஆம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் 137 ஆம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்பட்டது. இதில், மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் கதிரேசன், பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், விசுவநாதன், பாகனேரி ரவீந்திரன், கெளஸ் குருசாமி மற்றும் மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், விவசாயப் பிரிவு, தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.