தமிழ்நாடு

மழை வெள்ளம்: நள்ளிரவில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

DIN

சென்னையில் நேற்று (டிச.30) பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். . 

சென்னை ரிப்பன் மாளிகைக்கு நேரில் வந்த அவர், மழை பாதிப்பு குறித்தும், வெள்ள நீரை அகற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

சென்னையில் பிற்பகல் 3 மணி முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்தும், வெள்ள நீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரில் ஆய்வு செய்து கேட்டறிந்தார். 

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT