முகப்பு
தமிழ்நாடு

தைப்பூச திருவிழா: ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை நடை திறப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28 ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 24 ஜனவரி, 2021 at 3:58 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:52 AM

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28 ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வரும் 28.01.2021 அன்று வியாழக்கிழமை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை பூஜைகள் நடைபெற்று காலை 1.30 மணிக்கு ஸ்ரீபஞ்ச மூர்த்திகள் ஸ்ரீலெட்சுமணேசுவரர் கோயிலுக்கு புறப்பாடானவுடன் கோயில் நடை சாத்தப்படும்.

மாலை 6 மணிக்கு தெப்பத் திருவிழா  நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்று கோயில் வந்தடைந்தவுடன் அர்த்தசாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜைகள் நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.